ஸ்பிருலினா
ஸ்பிருலினா தனிக்கலத்திலான நீலப்பச்சை அல்காவாகும். இது உணவு வலையின் தொடக்கத்திலுள்ளது. உலக உணவுஸ்தாபனமானது இதனை அதிசிறந்த உணவாக அங்கீகரித்துள்ளது. ஸ்பிருலினாவானது 100மூ அல்கலைன் உணவாகும். அத்துடன் இது தாவர புரதத்தின் வளமான முதலாகவும் அனைத்து அவசிய ஊட்டச் சத்துக்களையும் அமினோ அமிலங்களையும் குளோரபில்லையும், அன்ரிஒட்சிடன்டையும் கொண்டுள்ளது. ஸ்பிருலினா பீற்ராகரோட்டின், கொழுப்பமிலங்கள், விற்றமின்கள், கனியுப்புக்கள், நார்ச்சத்து ஆகியவற்றையும் அதிகளவில் கொண்டுள்ளது. இது 60மூ தாவர புரதச் சத்தைக் கொண்டுள்ளது.
இவை குழந்தைகள் முதல் வயோதிபர் வரை பாவிக்கக் கூடியது. இலகுவாக சமிபாடடைவதுடன் சமிபாட்டு பிரச்சினை உடையவர்களுக்கு சிறந்த உணவாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நரம்பியல் சம்பந்தமான குறைபாடுகளைத் தீர்க்கிறது. கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஞாபக சக்தியையும் ஆர்வத்தையும் உண்டு பண்ணுகின்றது. எமது உடலிற்குத் தேவையான புரதம் பீற்றா கரோட்டீன், குளோரபில், கனியுப்புக்கள் மற்றும் அவசியமான போசணைப் பதார்த்தங்களை தன்னகத்தே உச்சளவில் கொண்டுள்ளது. இது இலகுவாக சமிபாடடையவும் உடலினால் அகத்துறிஞ்சப்படவும் கூடியது
உடல் வளர்ச்சியும், உடல் நல முன்னேற்றமும்:
நமது உடலைக் கட்டிக் காத்து வளர்ப்பது புரதச் சத்துக்களும், அமினோ அமிலங்களும் ஆகும். ஸ்பிருலினாவில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. குறைந்த கலோரி மதிப்பு கொண்ட, எளிதில் செரிக்கக் கூடிய எந்த வித பக்க விளைவும் இல்லாத புரதச் சத்துக்கள் இதில் 65 சதவீதம் அடங்கியுள்ளன. உடற் கட்டமைப்பு வளர்ச்சிக்கும், உடல் நல முன்னேற்றத்திற்கும் அது மிகவும் உதவி புரிகிறது. நமது உடலின் சதைகள் திசுக்கள் மற்றும் உறுப்புக்களின் கட்டமைப்பு வளர்ச்சிக்கும், உடல் நல முன்னேற்றத்திற்கும் மிகவும் அத்தியாவசியமான உணவுச் சத்து புரதமாகும். அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் அனைத்தும் நமது உடலிலேயே உற்பத்தி செய்யப்பட இயலாது என்பதாலும், ஸ்பிருலினாவின் தேவை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
அதே நேரத்தில், நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் கலந்து ரசாயன மாற்றம் பெறச் செய்வதற்கு ஜீரண நீர்கள் (நுணெலஅநள) மற்றும் ஹார்மோன்கள் (ர்ழசஅழநௌ) போலவே புரதமும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆற்றலைத் தூண்டுவது:
டி.எக்ஸ்.என். ஸ்பிருலினா எளிதில் ஜீரணிக்கக் கூடிய ஒரு இயல்பான துணை உணவாகும். இதில் அதிக புரதச் சத்து உள்ளது. அத்துடன் எளிதில் ஜீரணிக்கக் கூடிய வடிவில் பாலிசாக்ரைடுகள், (க்ளைகோஜென்,ராம்னோஸ், போன்ற கார்போஹைட்ரேட்டுகள் 15 சதவிகிதம் உள்ளன. இந்தச் சத்துக்கள் அனைத்தும் க்ளுகோசாக மிக எளிதில் மாற்றப்பட்டு, உடல் ஆற்றலுக்கான ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது. வேறு எந்த உணவுப் பொருள்களிலும் இருப்பதை விட இத்தகைய சத்துக்கள் ஆற்றலாக மாற்றம் பெறுவது ஸ்பிருலினாவில் அதி வேகமாக நிகழ்கிறது.
நோயெதிர்ப்பு ஆற்றலை பலப்படுத்துகிறது::
தொடர்ந்து ஸ்பிருலினாவை உட்கொள்வதால் நோயெதிர்ப்பு ஆற்றல் பலப்படுத்தப்படுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள முக்கிய பாகங்களான எலும்பு மஜ்ஜை ,ஸ்டெம் செல்கள் , மாக்ரோபேஜஸ் , டி. செல்கள், இயல்பாகக் கொல்லும் செல்கள், மண்ணீரல், தைமஸ் சுரப்பிகள், ஸ்பிருலினாவைத் தொடர்ந்து உண்ணும் போது மிகச் சிறப்பாக செயலாற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடலின் நோயெதிர்ப்பு செயல்பாட்டு நடைமுறையை மேம்படுத்தி, நோய்களிலிருந்து இது அதிகமான பாதுகாப்பு அளிக்கிறது.
கொழுப்பினி அற்ற உணவு::
மிக உயர்ந்த தரம் வாய்ந்த துணை உணவான ஸ்பிருலினாவில் உள்ள புரதச் சத்துக்களும், மற்ற அத்தியாவசியமான சத்துக்களும் போதிய அளவு உள்ள போதும், கொழுப்பினி அறவே அற்றதாக இருப்பது மிகச் சிறப்பாகும். கெட்ட கொழுப்பினியான ஊநீர் எல்.டி.எல் அளவை ஸ்பிருலினா குறைப்பதையும், நல்ல கொழுப்பினியான எச்.டி.எல் ஊநீரின் அளவை அதிகரிக்கச் செய்வதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு இதய ஆரோக்கியத்துக்கும் கெட்ட கொழுப்பினிகளைக் குறைக்கவும் ஸ்பிருலினா பயன் நிறைந்த ஒரு துணை உணவாகும்.
ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தி ஆரோக்கியம் அளிக்கிறது:
லேக்டோபேசிலஸ்; ,பி@பிடஸ், போன், குடலுக்கு நலன் தரும் தாவர உணவை அளிக்கும் செயல்பாட்டு உணவாக ஸ்பிருலினா செயல்படுகிறது. குடலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உயிரிகளை அளித்துக் காப்பதன் மூலம் ஈகோலி மற்றும் காண்டிடா அல்பிகான்ஸ் போன்ற நோய் விளைவிக்கும் உயிரிகளினால் ஏற்படும் பிரச்சினைகளை வெகுவாகக் குறைக்கிறது.
இயற்கையான நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் மக்னீஷியம் ஆகியவை ஸ்பிருலினாவில் அதிக அளவில் அடங்கி உள்ளன. ஹெமராயிட்ஸ் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றால் துன்புறுபவர்களுக்கு அவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க இச்சத்துக்கள் மிகவும் சிறந்தவையாகும்.
இயல்பாக உடலினைத் தூய்மைப்படுத்தி நச்சுப் பொருள்களை வெளியேற்றுகிறது:
க்ளோரோபில் ,பைகோசியானின் , பாலிசாக்ரைடுகள் , போன்ற மூலிகைச் சத்துக்கள் ஸ்பிருலினாவில் ஈடு இணையற்ற அளவில் இணைந்துள்ளன. பக்டீரியா மற்றும் இதர உயிரிகள் வெளியிடும் நச்சுப் பொருள்களில் இருந்து பாதுகாப்பு அளிக்க சைடோகைன் போன்ற நச்சு எதிர்ப்பிகள் நமது உடலில் உருவாவதை விரைவுபடுத்தி நமது நோயெதிர்ப்பு ஆற்றலை பலப்படுத்துபவை இவையே. இவ்வாறு நமது உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி நமது உடலை தூய்மைப்படுத்துகிறது.
மிகச் சிறந்த உயிர்வலியேற்ற எதிர்ப்பிகள் புற்று நோய் அபாயத்தைக் குறைக்கிறது:
நச்சுப் பொருள்கள், நோய்க் கிருமிகளின் தாக்குதலினால் நமது உடலுக்கு ஏற்படும் தீங்கைத் தடுப்பதன் மூலம் புற்று நோய் ஏற்படும் அபாயத்தை ஸ்பிருலினா குறைக்கிறது. ஆன்டி ஆக்சிடண்டு, வைட்டமின்கள், கனிமங்கள், பேடா கரோடீன், க்ளோரோபில், பைகோசியனின் போன்ற இயல்பான மூலக்கூறுகளைக் கொண்டிருப்பதால், இது மிகச் சிறந்த பாதுகாப்பு அளிக்கிறது.
உடல் எடை மற்றும் உடல் பருமனைக் குறைக்கிறது:
அத்தியாவசியமான உணவுச் சத்துக்கள் ஸ்பிருலினாவில் அதிக அளவில் இருப்பதாலும், நமது பசியைத் தீர்க்க உதவுவதாலும், நாம் குறைவாகவே உண்ணத் தொடங்குகிறோம்.
நாம் எந்த உணவு உட்கொண்டாலும் சரி, ஸ்பிருலினா மிகச் சிறந்த துணை உணவாகும். துணை உணவான இது, அதிக அளவு உண்ணும் வழக்கத்திலிருந்து நம்மை மாற்றி ஆற்றல் மிகுந்த உணவை உட்கொள்ள வைப்பதன் மூலம் நமது உடல் பருமனையும் எடையையும் குறைக்கிறது.
ஸ்பிருலினாவில் புரதச் சத்து மிகுந்து, கொழுப்புச் சத்து குறைந்து இருப்பதால், நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரி மதிப்பைக் குறைக்கவும், உடலின் எடையைச் சமநிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது. அதே நேரத்தில் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு வேலை செய்யவும், விளையாடவும் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் அது அளிக்கிறது.